இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறிலங்காவுடன் அதி உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவதில் இந்தியா பாராமுகமாக இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலமாக அடிக்கடி தமிழீழம் பற்றி பேசிவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டில்லியில் உண்ணாவிர தமிருக்கட்டும் பார்க்கலாம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பயிற்சிப்பீடம் தொடர்பாக பா.உ அரியநேத்திரன் வெளியிட்ட செய்திக்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சுற்றியுள்ள கடல்பரப்பில் கடல்சார் வளங்கள் இருக்கின்றமையினால் எதிர்காலத்தில் அவற்றை பயன்படுத்திக்கொள்வதற்காக இலங்கையின் கடல் எல்லையை 23 மடங்குகளால் அதிகரித்துக்கொள்வதற்கு ஐ.நா.வில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
வடக்கு எப்போது கிழக்கை இழந்ததோ அன்றிலிருந்து யுத்தத்தில் தோல்வியுற்றது. புலிகள் கிழக்கு முஸ்லிம்களை தாக்கித் துன்புறுத்தினார்களே அந்த வரலாற்றுத் தவறும் அவர்களின் தோல்விக்கு ஒருகாரணமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தெரிவித்தார்.
வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி அல்ல என்று கருத்துரைப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருவதாக மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
யாழ் மக்களின் வாழ்வு ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது, அவர்களின் வாழ்வு மேலும் சிறப்படைய நாம் உதவுவோம் என யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குரிய கண் சத்திர சிகிச்சை நிபுணரை அடுத்த வாரத்திற்கிடையில் நிரந்தரமாக நியமிக்காவிடில், தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் டொக்டர் எஸ். மதனழகன் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின்மீது அவதூறு கற்பித்த அமைச்சரின் செயலுக்கு வருந்தி கத்தோலிக்க மக்கள் மேற்கொண்ட பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகவியலாளர் எம்.ஏ.காதர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் இராணுவத்தினர் நிறுத்தியிருப்பது எந்தவகையிலும் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக அமையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் ஈரானிய சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணிக்க வழி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கையும் ஈரானும் வெகு விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நியோமல் பெரோரா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் சிங்கள மக்களுக்கு தமிழர்களின் நிலங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஏற்பாடு தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்ட காரணத்திற்காக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் எஸ்.தயானந்தா உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பாரியளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு கிடையாது என புவியியல் மற்றும் அகழ்வாராய்ச்சித் திணைக்களத்தின் தலைவர் என். ஜீ. விஜேயானந்த தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி விளாடிமிர் புடின் புகைப்படத்தின் மீது எச்சில் துப்பியவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யூரோ மண்டலத்தை விட்டு கிரீஸ் விலக நேர்ந்தாலும் சுவிஸ் ஃபிராங்கிளின் மதிப்பு குறைந்துவிடக் கூடாது. அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுவிஸ் ஏற்றுமதியாளரும், சுற்றுலாத்துறையினரும், மத்திய வங்கியும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
லண்டனில் பெரும்புகழுடன் வாழ்ந்து மறைந்த பொப் பாடகி ஏமி ஒயின் ஹவுசின் வீட்டை அவரது தந்தை விற்க முடிவு செய்துள்ளார், இதற்காக பிரத்யேக விளம்பரமும் செய்துள்ளார்.
கனடாவில் சஸ்கட்சவானில் உள்ள கழிவுநீர்க் குழாயில், தன் மனைவி மற்றும் இரண்டு வயது மகளோடு இறந்து கிடந்த நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கொலம்பியாவின் Farc என்ற அமைப்பினால் பிணையக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட ரோமியோ லாங்கிலாய்ஸ் என்ற பிரெஞ்சு பத்திரிக்கையாளர் 33 நாட்களுக்கு பின்பு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவின் பணக்கார நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் ஒன்பதில் ஒரு குழந்தைக்கு உணவோ, தங்குவதற்கு இருப்பிடமோ கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.