செய்திகள்
[ Thursday, 29-01-2015 09:00:19 ]
ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த தேவரபெருமவை எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 29-01-2015 08:52:02 ]
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
[ Thursday, 29-01-2015 08:46:46 ]
மைத்திரி அரசாங்கம் நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Thursday, 29-01-2015 08:33:32 ] []
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
[ Thursday, 29-01-2015 08:27:13 ]
பிரதம நீதியரசர் தொடர்பிலான சர்ச்சைகள் குறித்து நாளை நாடாளுமன்றில் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 29-01-2015 08:13:18 ]
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தெற்கு மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்.
[ Thursday, 29-01-2015 08:00:52 ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர் அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளனர்.
[ Thursday, 29-01-2015 07:55:12 ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. அவரது இடத்திற்கு டி. ஆர். ஜயசிங்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
[ Thursday, 29-01-2015 07:44:18 ]
முன்னாள் பிரதி தபால் அமைச்சரும் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய அமைச்சரவையில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு வழங்கிய வாகனங்களில் இரண்டு இதுவரை மீள ஒப்படைக்கப்படவில்லை என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ Thursday, 29-01-2015 07:34:02 ]
கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
[ Thursday, 29-01-2015 07:17:44 ]
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உற்பத்திகளுக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க, சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 29-01-2015 06:54:43 ]
புதிய பிரதம நீதியரசராக பொறுபேற்கவுள்ள கே. ஸ்ரீபவனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி கூறினார்.
[ Thursday, 29-01-2015 06:53:20 ]
பிரதம நீதியரசராக கடமையாற்றிய மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Thursday, 29-01-2015 06:45:37 ]
பாராளுமன்ற கூட்டத் தொடரில் இன்று பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் விசேட உரையாற்றவுள்ளார்.
[ Thursday, 29-01-2015 06:32:24 ]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் புத்தளம் கொஸ்வத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 31-01-2015 02:33:05 ]
"நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ - மாகவி பாரதி"- எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது.