செய்திகள்
[ Friday, 31-07-2015 03:43:03 ]
கடந்த 60 மாத காலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் செயற்படுத்திய 58 ஆயிரம் அபிவிருத்தி திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இடை நிறுத்தியமையினால் 15 லட்ச வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-07-2015 03:11:43 ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாக்காளர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக அவரது உத்தியோகபூர்வ செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Friday, 31-07-2015 03:02:22 ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-07-2015 02:52:31 ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேருக்கும் இரண்டாவது முறையாக தண்டனைச் சலுகை வழங்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
[ Friday, 31-07-2015 02:31:49 ]
பொலிஸார் கடமைகளை உரிய முறையில் செய்வதில்லை என முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-07-2015 02:20:13 ]
வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக்கொண்ட காலத்திலும் எரிபொருள் கொடுப்பனவு பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ Friday, 31-07-2015 01:52:23 ]
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மேலதிக பகுப்பாய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சுமார் 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதால் இதை நிறுத்திவைப்பது சிறந்தது என்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.
[ Friday, 31-07-2015 01:19:49 ]
சில மாகாணங்களின் முதலமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 31-07-2015 01:14:35 ]
பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இனவாத பிரசாரங்களும் அதிகரித்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சிங்கள மக்களின் வாக்குகளை கவரவேண்டும் என்பதற்காக இத்தகைய இனவாதப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவே தெரிகின்றது.
[ Friday, 31-07-2015 00:45:25 ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி என்ற பிரிவினை கோரிக்கை உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
[ Friday, 31-07-2015 00:38:12 ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அதிகாரம் கோரினாலும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
[ Thursday, 30-07-2015 17:53:02 ] []
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் மூடிமறைக்கப்படலாம்  என்ற பிரித்தானிய தொலைக்காட்சி செய்தி தொடர்பில் கருத்துரைக்க இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
(2ம் இணைப்பு)
[ Thursday, 30-07-2015 14:30:42 ] []
கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வு விசாரணைகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
[ Thursday, 30-07-2015 14:13:37 ]
சமஷ்டி கொள்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைவிட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
[ Thursday, 30-07-2015 13:49:56 ]
சமூக நலன்களுக்கு விரோதமாக கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருளை அடியோடு இல்லாமல் ஒழிப்பதற்காக யாழ் குடநாட்டு மாவட்ட நீதிபதிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் அநாவசியமாக மேல் நீதிமன்றம் தலையீடு செய்யமாட்டாது என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 30-07-2015 12:41:47 ]
'வேலுப்பிள்ளை பிரபாகரன் ஓர் உன்னதமான போராளி' - என்று நான் எழுதியதில் இருந்த ஒவ்வொரு எழுத்துக்கும் உயிரிருக்கிறது. அதிலிருந்த ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். வெற்று வார்த்தைகள் இல்லை அவை.