செய்திகள்
[ Friday, 22-05-2015 01:54:58 ]
உயிரிழந்த சொந்தகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
[ Friday, 22-05-2015 01:28:35 ]
ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர்.
[ Friday, 22-05-2015 01:15:38 ]
இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக ஆட்சியை கைப்பற்ற முன்னளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
[ Friday, 22-05-2015 00:31:05 ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஓரே மேடையில் ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Friday, 22-05-2015 00:21:40 ]
கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால் அரசியல் அமைப்புச்சபை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 22-05-2015 00:15:24 ]
அமைச்சர்களின் பதவி விலகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ நட்டத்தை ஏற்படுத்தவில்லை என சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 22-05-2015 00:08:44 ]
நிதிகுற்ற விசாரணை பிரிவினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்தது.
(2ம் இணைப்பு)
[ Friday, 22-05-2015 00:02:12 ] []
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார்.
[ Thursday, 21-05-2015 23:38:29 ] []
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு மொரிசியஸ் மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் தமிழீழம் மலர தாம் உறுதுணையாக இருப்பதாக இந்நாளில் உறுதியெடுத்துக்கொண்டுள்ளனர்.
[ Thursday, 21-05-2015 22:12:51 ]
இப்பொழுது எல்லாம் ஏதாவது விசாரணைகள் என்றால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச பதறுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Thursday, 21-05-2015 21:36:46 ]
அமைச்சர் ரிஷாத் பதியூதினை கைது செய்யாவிட்டால் தாம் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபட வேண்டிவரும் என சிங்கள ராவய அமைப்பின் பௌத்த துறவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
[ Thursday, 21-05-2015 20:33:00 ]
ஐ.தே.க. அரசினால் பெளத்த மதம் இழிவுபடுத்தப்படுகின்றது. இதனை பெளத்தர்களாகிய எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற அலுவல்கள் முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 21-05-2015 19:59:03 ] []
குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தான் என்று தெரிவித்திருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன்.
[ Thursday, 21-05-2015 19:10:43 ] []
பொலிசார் அனுமதி  மறுத்திருந்த நிலையிலும், எதிர்ப்பையும் மீறி வவுனியா விவசாய கல்லூரி  மாணவர்கள் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிவேண்டி  வகுப்புக்களை  புறக்கணித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[ Thursday, 21-05-2015 18:45:55 ]
யாழில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது வவுனியாவில் வைத்து இன்று மாலை 7 மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 24-05-2015 02:51:14 ]
போர் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் நிறைவடைவதற்கு ஒருசில நாட்களே இருந்த நிலையில் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டமை சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.