நெஞ்சை உருக வைத்த குமாரபுரம் படுகொலை..! 21 வருடங்கள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது ஏன்?

Report Print Nivetha in கட்டுரை

குமாரபுரம் படுகொலை ஈழப்போர் மீண்டும் ஆரம்பமாகியதை அடுத்து இடம்பெற்ற மிக மோசமான தமிழ்மக்கள் படுகொலையாகும். இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 21 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.

கடந்த 1996 ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி அன்று இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வாகும்.

இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 21 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. குமாரபுரத்தின் படுகொலை சம்பவம் யாவரும் அறிந்த உண்மை சம்பவமே..

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறு கோப்ரல் இராணுவ வீரர்களும் கடந்த வருடம் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 26 பொதுமக்கள் இராணுவத்தினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

36 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 6 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் 13 குழந்தைகள் அடங்கியிருந்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்க முக்கிய விடயமாகும்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் 09 மாத நிறை மாத கர்ப்பினியும் 16 வயது மாணவி ஒருவரும் கற்பழிக்கப்பட்டும் இருந்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் காயப்பட்டவர்கள் உடன் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு மூதூர் நீதிமன்றிலும் திருகோணமலை மேல் நீதி மன்றிலும் 17 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் அனுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது. இதன் படி நடைபெற்ற விசாரணைகளின் படி 2006 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை 108 நேரடி சாட்சிகள் நீதிமன்றில் குற்றவாளிகளை இனம் காட்டி சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

எனினும் இடையில் வழக்கு தள்ளி வைக்கப்பட்ட பின்னர் 20 வருடங்கள் கழிந்து கடந்த வருடம் 26.05.2016 அன்று மீள எடுக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் செயற்பாடாகவே காணப்பட்டது. நீதி தேவதையின் சட்டத்தராசு சமமாக உள்ளதை மக்கள் மத்தியில் நிருபித்தது.

ஆனால், 2016 ஜீலை 27 அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரையும் விடுதலை செய்தார்.

இலங்கை வரலாற்றில் யூரி சபையினால் குற்றம் புரிந்த இராணுவத்தினருக்கு வழங்கப்படும் தீர்ப்பு 100 சதவீதம் குற்றம் புரிந்தவர்களுக்கு சார்பானதாகவே இது வரையிலும் காணப்படுகின்றது.

ஒவ்வெறு குற்றவாளிகளையும் யூரி சபை நிரபராதியாக்கி குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து விடுவதனை இலங்கை அரசியல் வரலாற்றில் காணலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக குமாரபுரம் படுகொலை சம்பவத்தின் தீர்ப்பும் காணப்பட்டது. குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்.

யூரி சபையின் தீர்ப்பை எதிர்த்து மாற்றிய வரலாற்றில் தீர்ப்புகள் இதுவரை எந்த பதிவும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

எனினும் இழப்பு என்பது மீட்டுப்பார்க்க முடியாத ஒன்று.. இன்று இந்த துன்பியல் நிகழ்வு இடம்பெற்று 21 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது ஏன்...?

you may like...

Comments