ஆதாள பாதாளத்திலுள்ள ரகுமானின் NFGG மீண்டு வருமா?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை! ஆனால் தமிழ் கூட்டமைப்புடன் கூட்டாம் ஒப்பந்தமாம் என்று கிளம்பிய காத்தான்குடி ரகுமானின் NFGG வடகிழக்கு பிரிந்தே இருக்க வேண்டுமாம்!

"வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கும் வகையில், அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதே நடைமுறைச் சாத்தியமான, நீதியான தீர்வாக அமையும்" நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருத்து!

கடந்த பொது தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த NFGG என்ற சமுக சேவை அமைப்பு கடந்த பொது தேர்தலில் ஹக்கீம் கட்சியுடன் சேர்ந்து இணைந்து இந்த அமைப்பின் தலைவர் ரகுமான் போட்டியிட்டு தோல்வி கண்டார் !

அதன் பின்பு இலவச எம்.பி கேட்டு ஹக்கீமின் வீட்டில் தவமிருந்தார்! கிடைக்கவில்லை! இதில் ஹக்கீம் வெற்றி பெற்றார்!, எப்படி? கடந்த காலங்களில் கிழக்கில் NFGG ஹக்கீமை கிழித்து நாறடித்தார்கள். ஹக்கீம் நொந்து போனார்.

உண்மையில் ஹக்கீமின் அத்தனை வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியது இந்த NFGG தான். அதனால் மக்களிடம் NFGG யின் பரப்புரை நன்றாக எடுபட்டது. அதனால் ஹக்கீம் கொஞ்சம் ஆடிப் போய்விட்டார்.

இந்த நிலையில்தான் கடந்த பொது தேர்தலில் இதே ரகுமான், ஹக்கீம் கட்சியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். அதன் பின்பு கூச்சம் இல்லாமல் ஹக்கீமிடம் இலவச எம்.பி கேட்டு படை பட்டாளத்துடன் ஹக்கீம் வீட்டை முற்றுகை இட்டார். ஹக்கீம் ரகுமானுக்கு எம்.பி கொடுக்கவில்லை

அதன் பின்பு ரகுமான் ஒதுங்கி இருந்தார் ! இப்போது எதிர்வரும் கிழக்கு தேர்தலை நோக்கி அடிக்கடி அறிக்கை போர் அக்கபோர் செய்கின்றார் ! கிழக்கில் சில இடங்களில் ரகுமான் நினைக்கும் அல்லது எடை போடும் படித்தவர்கள் என்று 10-12 பேரை கூட்டி பேசிவிட்டு செல்கின்றார்.இதனால் என்ன பலன் கிடைக்கும் ?

ரகுமானை பொறுத்த மட்டில் காத்தான்குடி ஏறாவூர் வாழைச்சேனை ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் பகுதிகளில்தான் அதிக ஈடுபாடு கவனம் செலுத்த வேண்டும்.அதை விட்டு அம்பாறையில் உள்ள அக்கரைப்பற்று அட்டாளைச்சேனையில் 10 பேரை கூட்டி திருட்டு திருமணம் நடத்துவது போன்று பேசிவிட்டு செல்வதால் ரகுமான் எந்த இலக்கை அடையப் பார்கின்றார். இதில் ஏதும் தர்க்கம்(லாஜிக்) இருக்கின்றதா?

ரகுமானை பொறுத்த மட்டில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களை இலக்கு வைத்து பரப்புரை செய்து ஒரு மாகாணசபை உறுப்பினராவது வென்று காட்ட வேண்டும். அதை விட்டு சும்மா கும்மியடித்து அகலக்கால் வைக்காமல் உருப்படியான அரசியல் செய்ய வேண்டும். இவ்வளவு காலமாக ரகுமான் இந்த இலக்கை அடைந்து விட்டார் .

அவரது சாதனை OL படித்த பல்லாயிரக்கணக்கான வாலிபர்களை இலங்கைக்கு பொருத்தமல்லாத இலங்கையில் எதிர்காலம் இல்லாத கல்வியை கொண்டு கட்டார் மற்றும் வளைகுடா நாட்டிற்கு பணம் உழைக்க அனுப்பியது. மற்றும் அப்பால் ஏழை எளிய முஸ்லிம் மாணவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்து வருவது.

ஆனால் இவரது கல்வி இந்த முஸ்லிம் மாணவர்களுக்கு எதிர்காலத்திக்கு இலங்கையில் ஏதும் நன்மை கொடுக்குமா? முஸ்லிம் இனம் என்பது பணம் மட்டும்தான் இலக்கா? நாடு முழுவது கிளை அமைத்து முஸ்லிம் வாலிபர்கள் வளைகுடா செல்வதால் முஸ்லிம் வாலிபர்களின் எதிர்காலம் வளைகுடா நாட்டுடன் முடிந்து விடுகின்றது குறிப்பாக கட்டார் நாட்டில்தான் இவரது கல்வி பிரயோசனமாக இருக்கின்றது .

தற்போது கட்டார் நெருக்கடி இன்னும் சூடு பிடிக்குமானால் கட்டாரில் தொழில் புரிந்து வரும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் . அப்போது இவர்களின் நிலைமை என்னவாகும்.

ஒரு கல்வி என்பது அவனது எதிர்காலத்தை வளமாக்கும் தளமாக அமைய வேண்டும் . கட்டாரில் கட்டிடப் பகுதியில் காய்ந்து விட்டு இலங்கை வந்து அவன் என்ன செய்வான் ? இந்த விடயத்தில் பிள்ளைகளை பெற்ற தாய் தகப்பன் மார் சிந்திக்க வேண்டும் பணத்திக்கு யாரும் எதையும் செய்யலாம் . ஆனால் அவனது எதிர்காலம் பற்றியும் தாய் தந்தையர் சிந்திக்க வேண்டும்.

இன்று இவரது கல்வி பெற்று சான்றிதழ்களை கொண்டு கட்டாரில் வேலை வாய்ப்பு இன்றி பல வாலிபர்கள் ஒரு வருடமாகவும் தொழில் இல்லாமல் உள்ளார்கள் . பலர் பால் கம்பனிகளில் டீ போயாக உள்ளார்கள். இவரது கல்வி முற்று முழுதாக கட்டாரை இலக்கு வைத்து பணம் உழைக்க வேண்டும் என்று கொடுக்கப்படும் கல்வி. கட்டாரிலே தொழிலில்லை என்றால் இங்கு மட்டும் தொழில் கிடைத்து விடுமா?

4 ஆண்டுகளுக்கு முன்னர் ரகுமானை அவரது கொழும்பு காரியாலத்திற்கு நான் நேரடியாக சென்று பல அரசியல் விடயங்கள் பேசிவிட்டு இறுதியாக நான் சொன்ன ஒரு கருத்து மாகாணம் முழுவதும் அகலக்கால் கால பதிக்காமல் நீங்கள் காத்தான்குடியில் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றிதான் மாகாணத்தில் பறைசாற்றும் .

காத்தான்குடியில் வெற்றி பெறாமல் எங்குமே வெற்றி பெற முடியாது எனபதை இறுதியாக கூறிவிட்டு விடை பெற்றேன்.அதன் பின்பு அவரை சந்திக்கவுமில்லை அவர் பற்றி ஆய்வு செய்யவுமில்லை. அவர் பற்றிய எமது முதல் விமர்சனம் இது !

கடந்த பொது தேர்தலில் ரகுமான் விட்ட மகா தவறு

கடந்த காலங்களில் NFGG ஹக்கீம் கட்சியை தூற்றி நாறடித்து பரப்புரை செய்து விட்டு இந்த ரகுமான் தனக்கு எம்பி வேண்டும் என்ற நோக்கில் எப்படியும் எம்.பி அடையலாம் என்ற நற்பாசையில் ஹக்கீம் கட்சியில் இணைந்து போட்டியிட்டார்.

நாம் எமது 2015 தேர்தல் கணிப்பீட்டின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ரகுமான் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாக எழுதி இருந்தோம். ஹிஸ்புல்லா தோல்வி கண்டால் அலிசாகிர் மௌலானா வெற்றி பெறுவார் என்பதையும் தெளிவாக எழுதி இருந்தோம்.ஆனால் ரகுமான் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தோம்.

ஆனால் NFGG அணி கடந்த பொது தேர்தலில் மூதூர் பிரதேசத்தில் இருந்து இலக்கு வைத்து தமிழ் கூட்டமைப்பில் ஒரு எம்பி பெறும் மிக அரிய வாய்ப்பு இருந்தது.

அந்த வாய்ப்பை தகர்த்து தான் எம்பி பெற வேண்டும் என்ற நோக்கில் திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்பில் NFGG கூட்டுச் சேர முடியாதவாறு ஹக்கீம் கட்சியில் ரகுமான் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டார்.

இதன் மூலமாக ஹக்கீம் தனது கட்சி சார்பாக அலிசாகிரை வெற்றி பெற வைத்தார் என்பதை விட NFGG யின் பாரிய வெற்றி வாய்ப்பு மற்றும் முன்னேற்றத்தை முளையிலே கிள்ளி எறிந்து விட்டார். இதன் மூலம் ஹக்கீம் ரகுமானை அறுத்து வெட்டி வெற்றி பெற்றார்.

ஹக்கீமின் சாணக்கியம் வெற்றி என்பது நமது முட்டாள் தனம் மற்றும் பதவி ஆசை. மற்றும் அரசியலில் கற்றுக் குட்டி தனம் மற்றும் தான்தான் படித்தவர் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை . இந்த மூலதனம்தான் ஹக்கீமுக்கு தொடர் வெற்றிகளை பறித்துக் கொடுக்கின்றது.

NFGG 2 எம்பி பெற்றிருக்கும்

கடந்த பொது தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு 2 போனஸ் ஆசனங்களை பெறும் மிக அதிக வாய்ப்புள்ளதாக எமது தேர்தல் கணிப்பீட்டுக் கட்டுரையில் மிக தெளிவாக சொல்லியிருந்தோம்..

மூதூர் கிண்ணியா பகுதிகளில் ரகுமானின் NFGG க்கு கொஞ்சம் ஆதரவு இருந்தது .ஏற்கனவே கூட்டமைப்பில் NFGG கூட்டு ஒன்றும் இருந்து வந்ததால் கூட்டமைப்பில் NFGG இணைந்து போட்டியிட்டு மிகப்பெரிய தேர்தல் பரப்புரை செய்திருந்தால் திருமலையில் ஒரு எம்பி யை பெற்றிருக்கலாம்.

அத்துடன் கூடமைப்புக்கு கிடைக்கும் போனஸ் ஆசனத்தில் NFGG ஒரு ஆசனம் வழங்க வேண்டும் என்று தலைவர் சம்பந்தரிடம் கேட்டிருக்கலாம் .நிச்சயமாக தலைவர் சம்பந்தர் விட்டுக் கொடுத்து தந்திருப்பார். அந்த எம்பியை ரகுமான் பெற்றிருக்கலாம் .

கிழக்கில் ஹக்கீமுக்கு சவாலாக எமது மக்களின் குரலாக தமிழ் மக்களுடன் இணைந்த குரலாக உலக பரப்பில் முஸ்லிம்களின் பிரச்சினகைளை கொண்டு செல்லும் சக்தியாக கிழக்கில் எதிர்கால ஆளும் சக்தியாக பெரும்பான்மை அரசுடன் பேரம் பேசும் சக்தியாக ஊழல் இல்லாத ஆட்சியாக முஸ்லிம் அரசியக்கு முன்மாதிரியாக ரகுமான் செல்லக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பு இருந்தது .

அவைகளை எல்லாம் தட்டிக் களித்து விட்டு ஹக்கீமிடம் தோற்று நிற்பது பாவம் பரிதாபம்.

மூதூர் நகரில் திடீர் தௌபீக் கூட்டமைப்பில் இணைகின்றார் என்றதும் மிகப்பபெரிய மக்கள் அலையாக திரண்டார்கள்.

திருமலையில் கூட்டமைப்பு NFGG இணைந்து முஸ்லிம் வாக்குகளில் இருந்து சுமார் 15 -20 ஆயிரம் மூலமாக ஒரு எம்.பி பெறும் மிகப்பெரிய வாய்ப்பு தொக்கி நின்றது. இவைகள் எதுவுமே பற்றி சிந்திக்காமல் தான் காத்தான்குடியை இலக்கு வைத்து வெற்றி பெறலாம் எம்.பி பெறலாம் என்று ஹக்கீம் கட்சிக்கு தாவினார். ஹக்கீம் கட்சிக்கு தாவியதால் ஹக்கீமிடம் ரகுமான் மூக்குடைபட்டார் . சரணாகதியடைந்தார்.

தமிழ் கூட்டமைப்புடன் கூட்டு உடைந்தது

ரகுமான் கட்சி எப்போது ஹக்கீம் கட்சிக்கு தாவியதோ அப்போதே கூட்டு உடைந்து விட்டது. ரகுமானின் உண்மையான நோக்கம் ஆசை என்ன என்பதை தமிழ் கூட்டமைப்பு கண்டு விட்டது .

ஒரு உண்மையான நோக்கம் கொள்கை கொண்ட கட்சியாக ரகுமான் இருந்திருந்தால் எந்தவொரு தருணத்திலும் தமிழ் கூட்டமைப்பை விட்டு சென்றிக்க கூடாது . அத்துடன் எந்தவொரு நிலையிலும் ஹக்கீம் கட்சிக்கு ரகுமான் தாவியிருக்க கூடாது என்பது பொதுவான கருத்து .

தோல்வி கண்டாலும் தமிழ் கூட்டமைப்புடன் கூட்டு என்ற கொள்கையில் அம்பாறை திருமலையில் கூட்டமைப்பின் சின்னத்தில் NFGG தனது வேட்பாளர்களை களமிறக்கியிருக்க வேண்டும், பரப்புரை மட்டும் இருந்தால் போதாது அரசியல் கணக்கு சாணக்கியம் அரசியல் அறிவு மற்றும் வெற்றி தோல்வி பற்றிய கணிப்பீடு பற்றிய தெளிவு வேண்டு அல்லது அதண்ணை சுற்றியுள்ள ஒரு சிலராவது இவைகள் கொண்டவராக இருக்க வேண்டும்.

இவைகள் எதுவுமே இன்றி படித்தவர்கள் என்று களமிறங்கி கண்டது என்ன?

ஹிஸ்புல்லாஹ்வை தோற்கடிக்க வேண்டும் ஹக்கீமை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய ரகுமான் கண்ட பலன் என்ன ? ரகுமானின் நல்ல பாதை எங்கு எப்படி தடம் புரண்டது? படித்தவர்கள் மட்டும்தான் ரகுமான் கட்சியில் அரசியல் செய்ய முடியுமா? ரகுமானை சுற்றியுள்ளவர்கள் அரசியல் அறிவு கொண்டவர்களா என்பதை ரகுமான் சற்று ஆழமாக அலசுவது நல்லது.

மட்டக்களப்பில் கூட்டமைப்பு சின்னத்தில் ஒரு போதும் முஸ்லிம் வாக்குகள் மூலம் வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொண்டு NFGG விலகி இருக்கலாம் அம்பாறை திருமலையில் மிக அதிகமான பரப்புரை செய்து சாதித்திருக்காலம். NFGG தோற்றாலும் மதிப்பும் மரியாதையுமாக இருக்கலாம்.

ஆனால் ஹக்கீமிடம் எம்பி கேட்டு கேவளப்பட்டு கூட்டமைப்பிடம் அவமானப்பட்டு NFGG நொந்து நூலாகியுள்ளது. இப்போது வடக்கில் ஒரேயொரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் மன்னார் அஸ்மினை பதவி விலக வேண்டும் என்றும் கூட்டமைப்பு ரகுமான் கட்சிக்கு வழங்கிய போனஸ் ஆசனத்தை பறிக்கப் பார்ப்பது இன்னுமொரு கேவலம்.

கடந்த பொது தேர்தலில் NFGG ஹக்கீமுடன் இணைந்த போதே கூட்டு முறிந்து விட்டது . அப்புறம் எப்படி அஸ்மினை ராஜினாமா செய்ய சொல்லுவது ரகுமானின் நடவடிக்கை எல்லாமே முரண்பாடு கொண்டவை .

படித்த கூட்டம் என்று ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹக்கீம் கட்சிக்கு எதிராக வந்த ரகுமான் அணி மிகவும் பாதாளத்தில் விழுந்து விட்டது . எழும்புவது கடினம் எங்கிருந்து எழும்பும் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் ரகுமானுக்கு மற்றுமொரு பாடத்தை புகட்டும் .

ஒரு இனத்தின் எதிர்கால அரசியல் மற்றும் முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கட்டார் நாட்டில் முஸ்லிம் வாலிபர்கள் படும் அவஸ்தை குறித்துக் செய்யபட்ட ஆய்வு இது.