சனிப்பெயர்ச்சி பலன்கள்- கடகம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

Report Print Fathima Fathima in ஜோதிடம்

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.

தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.

கடகம்
புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
பெயர் எழுத்துக்கள்- ஹீ, ஹே, ஹோ, டி, டு, டெ, டொ, டா

முயற்சிக்கு பெயர் தான் கடகம், உங்களுக்கு சனீ 6வது இடத்தில் உள்ளார், பயனுள்ள இடம் தான் 6ல் துலங்கும்.

பொன்மயமான காலம் எனலாம், தொட்டது எல்லாம் துலங்கும், ஏற்கனவே நன்றாக முயற்சி உடையவர்கள், நிதானமாக எதையும் பக்குவமாய் செய்யும் ஆற்றல் உண்டு.

கடந்தகாலத்தில் புயல் வேகத்தில் அளவோடு வெற்றியை தரும், இருப்பினும் 20-10-2018 வரை கொஞ்சம் தடங்கல் உண்டு, பின்பு அளவில்லா நற்பலன்கள் உண்டாகும்.

ஜாதகப்படி நல்லவிதமான திசாபுத்திகள் நடப்பில் இருந்தால் தான் நல்லது, அப்படி இருந்தால் நன்மை கைக்கூடும்.

சரீரம் நன்கு செயல்படும், இதுவரை இருந்த உடல்பிணிகள் மறைந்து நலம் உண்டாகும். மனதின் செயல்பாடுகள் மிக்க நலம் உள்ளதாக அமையும்.

கற்பனை வளம்கூடும், மனம் துள்ளி குதித்து மகிழும், பிறகு என்ன சந்தோஷ காற்று தான்.

6மிட சனீ என்றால் நிறைந்த அமைதியை தருவார், பொன்- பொருள்- ஆடை- ஆபரணத்தை தரும், களிப்பை உண்டாக்குவார்.

முன்னம் எல்லாம் எதற்கும் பயந்தீர்கள் அல்லவா! இப்போது குடும்பம் நன்மையாய் உங்கள் கருத்துப்பட செயல்படும். பின்னல்- பிணக்குகள் மறைந்து உறவு வளம் அடையும்.

புதிய வாழ்வின் செயல்வடிவம் மிக நன்றாக தெறியக்டும், ஆக்கப்பூர்வ வாழ்வு இதுான்இ

செய்தொழில் ஏற்றம் உண்டாகும், இது வளர செயல்படாமல் இருந்த தொழில்கள் நடக்கத்தொடங்கும். அதிக முதலீடுகள் கிடைக்கும்.

உற்பத்தி பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு, உணவு சம்பந்தமான தொழில் மிகுந்த ஏற்றம் உண்டு, செயல்படுங்கள்.

இனிப்பு சேர்ந்த உணவு வகை- குளிர்பான தொழில்களும் வெற்றி காணும், பொதுவில் நல்லபடியான ஆரம்பம் பின் ஏற்றம் உண்டாகும்.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும், படித்தவர்களுக்கு உரிய வேலை கிடைக்ககூடும். எப்படியம் லாபம் உண்டாக்க சனீ தவறமாட்டார்.

நீங்கள் தெய்வநம்பிக்கையை விடமாட்டீர்கள், உங்கள் ராசியில் புனர்பூசம் என்றால் ஸ்ரீ பெருமாள், பூசம் என்றால் ஸ்ரீமுருகன், ஆயில்யம் என்றால் ஸ்ரீசிவன்.

இளமையான காலத்தில் மனம் பூரிக்கும், நல்ல நிகழ்ச்சிகள் நடந்தால்தான் நாம் பிறவி எடுத்ததன் பலன் அடையலாம். முன்னதாக உங்கள் கடகம் ராசியை தான் முதல் பிறவி என்ற ஜோதிட குறிப்பும் ஒன்று உள்ளது.

ஆகவே ஆத்மா நல்ல சரீரமாக அதிர்ஷ்டமான வாழ்க்கையை உடைய மனித கூட்டில் நுழையும் என்ற கருத்துப்பட கடகம் ராசிக்காரர்கள் எல்லா அதிர்ஷ்டத்தையும் உடையவர்கள்.

ஆகவே ஏற்கனவே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள், இப்போது வெற்றி நிச்சயம்.

ஆனால் சனீ- சுக்கிரன்- புதன் திசாபுத்தி நடந்தால் கொஞ்சம் சிரமத்தை தரும். தகுந்த பரிகாரத்தை செய்து கொள்வது நலம்.

மனைவியின் பெயரால் சொத்து தொழி்ல் வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு உரிய நல்ல காலம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

ஆனால் திருமண வாழ்வில் தான் கஷ்டம், சிலர் வீண் பிடிவாதத்தால் குடும்பத்தை பிரிந்து வாழும் சூழல் அமையலாம். சிலர் கோர்ட் வழக்கு என மன அமைதி இல்லாமல் வாழ நேரிடலாம்.

இதுதான் கௌரவம் என எண்ணாமல் கணவர்- பிள்ளைகள் என்ற வாழ்க்கை தான் சுயகௌரவம் என எண்ணினால் சுபம் தானே வரும். நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் நம் மனித வாழ்வு கொஞ்ச காலம் தான் இந்த காலத்தை இன்பம் பெற்று வாழ்வதுதான் நல்லது, சனீஸ்வரன் அருள்வார்.

அதிர்ஷ்ட எண்கள்- 1, 2, 3

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, சந்தனம்

அதிர்ஷ்ட கல்- முத்து

வணங்க வேண்டிய தெய்வம்- ஸ்ரீ பார்வதி தேவி

Comments