பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை ரூபாய்

Report Print Vethu Vethu in வர்த்தகம்

ரூபாயின் பெறுமதியை தற்போது பாதுகாப்பது என்பது பாரிய சிக்கலான விடயமாக மாறியுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாளுக்கு நாள் குறைவடைகின்றமை மற்றும் அந்நிய செலாவணியின் வெளியேற்றம் அதிகரித்துள்ளமையினால் ரூபாயை பாதுகாப்பது என்பது பாரிய சிக்கலான மாறியுள்ளது.

அதற்கயை கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை நேரடி வெளிநாட்டு முதலீடு 444.5 மில்லியன் டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது நூற்றுக்கு 34.4 வீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை அரசாங்க பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வெளியேறும் வேகம் அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த 324.3 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வரை 309.2 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய அரசாங்க பத்திரங்களில் வெளிநாட்டவர்களின் முதலீடுகளின் அளவு தற்போதுவரையில் நூற்றுக்கு 4.4 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த வருடம் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை கொழும்பு பங்குச்சந்தையின் இரண்டாம் நிலை சந்தையில் நிகர கொடுப்பனவு 2 மில்லியன் அமெரிக்க டொலர் என குறிப்பிடப்படுகின்றது.

Comments