இலங்கையில் அறிமுகமாகும் நவீன கார்

Report Print Vethu Vethu in வர்த்தகம்
advertisement

மலேசியாவின் Perodua நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற "Bezza" சேடான் ரக கார்கள் நேற்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பிரதிநிதியான யுனைட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யுனிமோ என்டர்பிரைஸஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இது Peroduaவின் முதலாவது சேடான் ரக வாகனமாகும். 2016 ஆம் ஆண்டின் சிறந்த மலேசிய மோட்டர் வாகனமாக இந்த கார் விருது பெற்றுள்ளது.

இந்த மோட்டார் வாகனம் 1000 CC VVT-i இயந்திர திறனை கொண்டுள்ள நிலையில், Dual Air Bag, ABS, EBD போன்ற பாதுகாப்பு விடயங்கள் இந்த வாகனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் வாகனம் 3690,000/= என்ற விசேட விலையில் இலங்கையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

advertisement