சீன நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை

Report Print Ajith Ajith in வர்த்தகம்

இலங்கையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உள்ளூர் எரிபொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட சீன நிறுவனம் ஒன்று விடுத்திருந்த கோரிக்கை, இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுவான்கியூ என்ற நிறுவனமே இந்த கோரிக்கையை விடுத்திருந்தது.

சீன நிறுவனங்கள், உற்பத்தியை மேற்கொண்டு அவற்றை ஏற்றுமதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

எனினும் இலங்கையில் அவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஏற்கனவே இந்திய ஐஓசி நிறுவனம் இலங்கையின் உள்ளூரில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.