சிறிஸ்கந்தராசா சுமணன் கொலை வழக்கு..! சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளஞ்செழியன்

Report Print Vino in சமூகம்
advertisement

யாழ்.சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மற்றுமொருவர் நபர் வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் எற்படும், வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு ஏற்படும், சுதந்திரமாக நீதி விசாரணை செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

எனவே, இரண்டு நீதிமன்றங்களிலும் சிவில் சாட்சிகள் சாட்சியமளித்து முடியும் வரை இவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருநத எதிரிகளான 7 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் டிசம்பர் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

மேலும் அவர்களின் பாதுகாப்பு கருதி வவுனியா சிறைச்சாலையிலோ அல்லது யாழ் சிறைச்சாலையிலோ அவர்களை வைக்காமல் அனுராதபுரம் சிறைச்சாலையில் அவர்களைத் தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளைஞனின் சடலம் கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments