மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்

கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகளுக்கு உதவித் திட்டங்கள் இன்று(11) வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் 16 குடும்பங்களுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு குறித்த செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான தலா 50,000 பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகளை வழங்கும் உதவித்திட்டத்தினூடாக 2015 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் முழுவதுமாக 860 குடும்பங்கள் பயனடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்கள் வீதம் 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உதவி திட்டம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் மூலம் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 52 பயனாளிகளுக்கு வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இன்று வழங்கப்பட்ட உள்ளீடுகளில் 07 குளிர்சாதன பெட்டிகள் அவர்களது வியாபாரத்தை மேம்படுத்தவும், மாடு வளர்ப்பிற்கு மாடுகள் கொள்வனவு செய்யப்பட 06 பேருக்கான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் கோழி வளர்ப்பிற்கான உள்ளீடுகளை கொள்வனவு செய்ய 02 பயனாளிகளுக்கான காசோலைகளும், அத்தோடு தோட்டச் செய்கைக்கு குழாய்க்கிணறு தொகுதியொன்றுமாக மொத்தம் 09 காசோலைகளும் இன்றய தினம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments