மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவது அவசியம்

Report Print Manju in சமூகம்

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் மட்டும் வழங்காமல், அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான உதவிகளையும் வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழுவின் தூதுவர் கி டுங் லாய் மர்கியு தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருத நகர் கிராமத்தில் வீட்டுத்திட்ட ஆரம்பப் பணிகள் நடை பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பதின்நான்கு மில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்த பன்முகப்படுத்தப்பட்ட வீடமைப்புத்திட்டத்தினூடாக 215,000 இற்கும் அதிகமான மக்கள் பயன்பெறவுள்ளனர்.

இந்தத்திட்டத்திற்கான நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியள்ளதுடன், திட்டத்தை செயற்படுத்தும் நடவடிக்கைகளை வேர்ள்ட் விசன் லங்கா மற்றும் கபிடாட் போர் கியுமானிட்டி ஆகியன முன்னெடுக்கின்றன.

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த செயற்திட்டத்தினூடாக வீடுகள் மட்டும் வழங்காமல் அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான உதவிகளையும் வழங்கும் என நான் நம்புகின்றேன்.

மேம்படுத்தல்கள் மற்றும் கட்டியெழுப்பல்கள் ஆகியவற்றை தன்னிறைவு காணச்செய்தல் என்பது இலக்காக அமைந்துள்ளதுடன், நாம் அதற்காக சரியான திசையில் பயணித்த வண்ணமுள்ளோம் என்பதையிட்டு பெருமையடைகின்றேன் என்றார்.

மேலும், இந்த திட்டம் நிவாரணம் புனருத்தாரணம் மற்றும் ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்வதுடன் 2315 வீடுகளை நிர்மாணிக்கவும் 140 வீடுகளை புனரமைப்பு செய்யவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 31 பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.

2020 ஆண்டு மட்டில் திட்டம் பூர்த்தியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நிர்மாணச் செலவுகளை குறைப்பதாக மாற்று மூலப்பொருட்கள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்தவுள்ளது.

இதனூடாக வாழ்வதற்கு உகந்த வீடுகளை நிர்மாணித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கற்கள் மற்றும் நிர்மாணப்பொருட்கள் போன்றவற்றில் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

தன்றிறைவுள்ள நிலையான மற்றும் வலிமையான சமூகங்களை காண நாம் ஆவலுடன் உள்ளோம். நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்தும் நாம் நீண்டதூரம் பயணித்துவிடுவோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவிக்கு நன்றி தெரிவிப்பதுடன், இதனூடாக உள்நாட்டு பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் உள்நாட்டு கற்கள் அடிப்படையிலான தொழில்நுட்பங்களில் முதலீடுகளை மேற்கொள்வது செலவீனம் குறைந்ததாக அமைந்திருக்கும் நிலைபேறானதாகவும் அமைந்திருக்கும் என கபிரெட் போர் கியுமானிட்டி அமைப்பின் ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கான பிராந்திய உப தலைவர் டொர் நெல்சன் தெரிவித்தார்.

திட்டத்தின் செயற்பாடுகளில் புத்தாக்கமான மூலப்பொருட்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அடங்கலாக நிலையான இல்லங்களுக்கான அணுகல் கோம்ஸ் நொட் கௌஸ் பொருத்தமான நுண்நிதி ஊடாக வீட்டை விஸ்தரிப்பது அல்லது வியாபாரத்திற்கு பொருத்தமான பகுதியை உருவாக்குவது.

நிர்மாணம் தொடர்பான தொழிற்பயிற்சிகள் பொருத்தமான கட்டட மூலப்பொருட்கள் பற்றிய பயிற்சிகள் மற்றும் முறைகள் பற்றிய பயிற்சிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தரரளவு வியாபாரங்களை வலிமைப்படுத்துவது அடங்கலாக குடும்பங்களுக்கு பொருத்தமான பொது வாழ்வாதார உதவிகள் சேமிப்புத்திட்டங்கள் நுண் நிதியியல் மற்றும் வியாபாரத்தின் அடிப்படை அடங்கலாக நிதி அறிவு தொடர்பில் குடும்பங்களுக்கு பயிற்சிகளை பெற்றுக்கொடுத்தல் பொருத்தமான நுண்நிதியியல் மற்றும் கடன் முகாமைத்துவத்திற்கான மேம்படுத்தப்பட்ட அணுகலை வழங்கல்.

சமூக அடிப்படையிலான நிறுவனங்களுக்கு வலிமையூட்டல் இடர் அனர்த்தத்தை குறைப்பதற்கு பங்களிப்பு வழங்கல் சமாதான கட்டியெழுப்பல்கள் மற்றும் பாலியல் சமத்துவம் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பு இருக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

வேர்ள்ட் விசன் லங்கா தேசிய பணிப்பாளர் தனன் சேனாதிராஜா இந்த திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளதை விட்டு நாம் மிகவும் பெருமையடைகின்றோம். வேர்ள்ட் விசனின் பிரதான வலிமைகளில் ஒன்றாக அதன் சமூக ஈடுப்பாடு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி நிபுணத்துவம் அமைந்துள்ளது.

இந்த செயற்பாடுகளில் எமது இடையிடுகள் என்பது வீடுகளை மகிழ்ச்சிகரமானதும் நிலையான இல்லங்களாகவும் மாற்றியமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என நான் நம்புகின்றேன் என்றார்.

இன்று இத்திட்டத்தினுடாக இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலகத்தின் திட்ட மிடல் பணிப்பாளர் அமல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments