நெகிழ்ச்சியான தருணம்! ஜனாதிபதியின் கையை பிடித்து கோரிக்கை விடுத்த ஊனமுற்ற பிள்ளை

Report Print Vethu Vethu in சமூகம்

கேகாலையில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நிகழ்வொன்று நடைபெற்றது.

நிகழ்வை முடித்து விட்டு வெளியே வந்த ஜனாதிபதியை சுற்றி அங்கிருந்த மக்கள் கூடியிருந்தனர்.

இதன்போது அங்கு வந்த ஊனமுற்ற யுவதி ஒருவர், ஜனாதிபதியின் கையை பிடித்துக் கொண்டு விடுத்த கோரிக்கை அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

குறித்த பிள்ளைக்கு வசிப்பதற்கு வீடேனும் இல்லை எனவும், விரைவில் வீடொன்றை பெற்றுத் தருமாறும் கோரியுள்ளார்.

அவரால் பேச முடியாத போதிலும் அவர் கூற முற்படுவதனை அங்கியிருந்தவர்கள் ஜனாதிபதியிடம் விபரித்துள்ளனர்.

அந்த கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி விரைவில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக குறித்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்துள்ளார்.

Comments