10 வருட சிறை தண்டனையுடன் 50000 ரூபா தண்டப்பணம் அறவிட தீர்மானம்

Report Print Vethu Vethu in சமூகம்
advertisement

சில வாகன சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடுவதற்கு 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபா வரை தண்டப்பணத்தை அதிகரிப்பதற்காக, அதனை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்ட தண்ட பணத்திற்கு பஸ் சங்கம் மற்றும் முச்சக்கர வண்டி சங்கம் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டன. அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு ஸ்தம்பிதம் அடைந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனம் ஓட்டுதல், சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்குதல், மதுபானம் அல்லது போதை பொருள்ப்பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல், பாதுகாப்பற்ற ரயில் பாதைகளில் சட்டத்தை மீறுதல், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பில் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை தண்ட பணம் அறிவிட வேண்டும் என அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் தண்ட பணத்திற்கு மேலதிகமாக 3 மாதத்தில் இருந்து 10 ஆண்டுகள் சிறை வைத்தல், சாரதி அனுமதி பத்திரத்தை இரத்து செய்தல் போன்ற விடயங்களையும் மேற்கொள்ள வேண்டும் என அந்த குழு யோசனை முன்வைத்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரை தொடர்பில் பஸ் சங்கம் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் போக்குவரத்து அமைச்சரிடம் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அதற்காக விடயங்களை சமர்ப்பிப்பதற்காக அவர்களின் கோரிக்கைகளுக்கமைய அந்த சங்களுக்கு இரண்டு வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் போக்குவரத்து அமைச்சரினால் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

advertisement

Comments