மாணவி வித்தியா கொலை வழக்கு! தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் முக்கிய புள்ளிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலையின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பி செல்ல முற்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சுவிஸ் குமார் தப்பிக்க உதவி, பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில் கொழும்பு சட்ட பீட பேராசிரியர் வீ.டீ.தமிழ்மாறன் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித ஜயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் குற்ற பொலிஸ் விசாரணை பிரிவிற்கு அழைத்து வாக்குமூலம் ஒன்று பதிவு செய்துக் கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேராசிரியர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்த முடியாதல்லவா? கொலை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் பேராசிரியர் குறித்தும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறித்தும் சிந்திப்போம் என ஆவணங்களுக்கு பொறுப்பான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளவர்கள் தனது மாணவர்கள் எனவும், தன்னை ஒரு போதும் கைது செய்ய மாட்டார்கள் என சட்டம் தொடர்பிலான பேராசிரியர் தமிழ்மாறன் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றங்கள் உதவியமை மற்றும் உத்தரவிட்டமை, பாதுகாப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது வேறும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சொக்கா மல்லி தொடர்புடைய இரட்டை கொலை இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை அனுப்பி வைத்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments