வாகரை குகனேசபுரத்தில் சனசமூக நிலையம் திறந்து வைப்பு

Report Print Navoj in சமூகம்

பிரதேச செயலாளர் சி.இந்திரகுமார் தலைமையில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குகனேசபுரத்தில் சனசமூக நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சனசமூக நிலையத்தின் திறப்பு நிகழ்வானது இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதேசசபை சமூக சேவை உத்தியோகத்தர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரிடம், குகனேசபுரம் மக்கள் விடுத்த கோரிக்கையின் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் இக்கட்டடத்தை நிர்மாணித்து வழங்குமாறு கோரியிருந்தார்.

அந்த வகையில் வாகரை பிரதேச சபையின் பதின்மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சனசமூக நிலையம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments