காய்ச்சலால் கிளிநொச்சியில் பறிபோன மாணவியின் உயிர்

Report Print Vino in சமூகம்
காய்ச்சலால் கிளிநொச்சியில் பறிபோன மாணவியின் உயிர்

கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருந்த போதும் டெங்கு காய்ச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.

மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் சுகமடைந்த நிலையில் மீண்டும் கால் கை குத்து காரணமாக நேற்று வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் ஒரு நோயாளிக்கு மூன்று நிலைகளில் தாக்குகின்றது எனவும், அதில் ஒரு நிலை காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சுகமடைந்த நிலையில் உடலில் டெங்கு தொற்று தீவிரமடைகின்றது.

எனவே காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் உடல் வழமைக்கு மாறாகவும் கை, கால் குத்து வலி போன்ற அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதனால், நுளம்பு பெருக்கம் ஏற்படாத வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்பதோடு உடனடியான சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலதிக இணைப்புக்கள் - நிபோஜன்

Comments