வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி ஊர்வலம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
advertisement

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி எதிர்வரும் 28 ஆம் திகதி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தினை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், வவுனியா வளாக ஊழியர் சங்கம், மாணவர் சங்கங்கள், வவுனியா பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கடந்த 25 வருடங்களாக வவுனியா வளாகமாக செயற்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்துமாறு கோரி இடம்பெறும் ஊர்வலமானது வளாகத்தின் குருமன்காடு பிரயோக விஞ்ஞான பீடத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நகர் வழியாக சென்று வவுனியா அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடலும் கருத்தறியும் நிகழ்வும் இன்று வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாகத்தின் நிர்வாக கிளை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட வவுனியா வளாகத்தினை பிரதிநிதிப்படுத்தும் சங்கங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

advertisement

Comments