கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் பத்தேகம சமிததேரர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்களை தென்மாகாண சபை உறுப்பினரான பத்தேகம சமித தேரர் இன்று சந்தித்துள்ளார்.

குறித்த தேரருடன் தென்மாகாண விகாரைகளைச் சேர்ந்த இரண்டு பிக்குகளும் அங்கு சென்று அந்த மக்களின் நியாயமான போராட்டத்தினை நேரடியாக பார்த்து, கலந்துரையாடியுடன், ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமது சொந்த நிலத்தை விமானப்படையினரிடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்தும் 18வது நாளாக இன்று தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments