தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துபொருட்கள்: யாழில் சம்பவம்

Report Print Murali Murali in சமூகம்

பாவனைக்கு உதவாத (காலாவதியான) ஒரு தொகை மருந்து பொருட்கள் யாழ் நகரின் பிரபல தனியார் வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

யாழ். நகரில் வைத்தியசாலை வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து இந்த மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலவதியான மருந்து பொருட்கள் நோயாளிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகாரசபை சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட காலாவதியான மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துபொருட்களே அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் இருந்து மருந்து பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Comments