முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் சர்வதேச முக்கிய பிரமுகர்

Report Print Mohan Mohan in சமூகம்

கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் ஜோன் ரொர்ரி (John Tory) இன்று முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது 2009 ஆம் ஆண்ட இறுதியுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் அங்குள்ள பொது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபிக்கு முன்னே மலர்வளையம் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், குறித்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கனடா வாழ் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments