பிரான்ஸ் பிரஜையை காப்பாற்றிய நுவரெலிய யுவதி

Report Print Vethu Vethu in சமூகம்

மலையிலிருந்து தவறுதலாக விழச் சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவரை, யுவதி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.

புகைப்படம் எடுக்கும் நோக்கில் பிரான்ஸ் பெண்ணொருவர் மலை மீது ஏற முற்பட்டுள்ளார். அந்த நேரம் கால் தவறி கீழே விழ எத்தணித்த வேளையில் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து சுற்றுலாவுக்காக நுவரெலியா சென்ற 30 வயதுமிக்க பெண்ணொருவரே உயிராபத்துக்கு முகங் கொடுத்துள்ளார். அவர் தனது கணவருடன் அங்கு சென்றுள்ளார்.

23 வயதான ஜனனி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற யுவதியே, விரைந்து செயற்பட்டு குறித்த பிரான்ஸ் பிரஜையை காப்பாற்றியுள்ளார்.

காப்பாற்றிய யுவதிக்கு நன்றி தெரிவித்த பிரான்ஸ் பிரஜை, நினைவு சின்னம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அத்துடன் பிரான்ஸ் வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.

Comments