ஆரையம்பதியில் மோதல்: பெண் உட்பட ஏழு பேர் படுகாயம்

Report Print Kumar in சமூகம்
advertisement

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வாநகர் பகுதியில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாய்த்தர்க்கமே கைகலாப்பாக மாறியுள்ளதாகவும் இதன் போது கத்திக்குத்தும் மற்றும் தடி தாக்குதல் போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மரண வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கிடையிலே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் மரண வீட்டில் மரணித்தவருக்கு சொந்தமான காணிப் பங்கீடு தொடர்பில் குடும்பத்தினருக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இது சண்டையில் முடிவடைய ஒரு பெண் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஆரையம்பதி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement

Comments