வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இன்று (19) மதியம் 1 மணியளவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் இருந்து மொனராகலவுக்கு செல்வதற்காக வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு வருகை தந்த நபர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரை நாளைய தினம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைவஸ்த்து தடுப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரி IP WS பண்டார ,SI ரட்நாயக்க ,பிரி யசாந்த PC 2991, விவேகானந்தன்PC 87856 ,மயூரன்PC 89487 , நிசாந்தன் PC 89539 , கிரிவெல 32336 ,ஒபேசேகரPCD 2650 ஆகியோரின் முயற்சியால் குறித்த நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments