வடமராட்சியில் தொடரும் போராட்டம்: அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேச செயலகத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 15ம் திகதி காலை ஆரம்பித்த கால வரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (19) ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள், உறவுகள் தொடர்பாக அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இன்றைய போராட்டத்தில் 25ற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஐந்தாவது நாளாகவும் எமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் எங்களைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் பாராமுகமாகச் செயற்படுவதாகப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Comments