வவுனியாவில் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு

Report Print Sathees in சமூகம்
advertisement

வவுனியாவில் தேயிலை மற்றும் பால் பக்கற் போன்றவற்றை வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்யும் களஞ்சியசாலையொன்று உடைக்கப்பட்டு பணம் மற்றும் காசோலை திருடப்பட்டுள்ளதாக முறைபாடொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா பொதிமண்டப (குட்சைட் றோட்) வீதியிலுள்ள களஞ்சிய சாலையில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சனிக்கிழமை தமது கடமைகளை நிறைவு செய்த பின்னர் இரவு 8.30 மணியளவில் குறித்த களஞ்சியசாலையினை பணியாளர்கள் மூடிவிட்டுச் சென்றுள்ளனர். நேற்று விடுமுறை என்பதால் களஞ்சியசாலையில் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை.

இன்று காலை 7.30 மணியளவில் களஞ்சியசாலையினை திறப்பதற்கு சென்ற ஊழியர் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளதனை அவதானித்துள்ளார்.

இதையடுத்து களஞ்சியசாலை உரிமையாளரூடாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த களஞ்சியசாலை நேற்று இரவே உடைக்கப்பட்டுள்ளதாகவும், களஞ்சியசாலையிலிருந்து 43 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபா வரையான பணம் மற்றும் காசோலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement

Comments