மட்டக்களப்பில் ஒக்ஸ்பாமின் அனுசரணையுடன் மாபெரும் கண்காட்சி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் ஒக்ஸ்பாமின் அனுசரணையுடன் “பெண்கள் காந்த சக்தி 2017” மாநாடும், கண்காட்சியும் முன்னெடுக்கப்படவுள்ளது.

விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பங்குகொள்ளும் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை கல்லடி பாலம் அருகில் உள்ள பாலம் சந்தையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள கண்காட்சி 24 ஆம் திகதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஒக்ஸ்பாம் திட்டங்கள் மூலம் அனுசரணை வழங்கப்பட்ட விவசாயிகளுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கும் தங்களது அனுபவங்களையும் சிறந்த தொழில் முறைகளையும், ஏனைய சேவை வழங்குகின்ற பங்குதாரர்களுடனும் அதனுடன் தொடர்பு கொண்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடனும் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இதனூடாக கிடைக்கிறது.

இந்த நிகழ்வானது மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், தொழிலதிபர்கள், சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள், இதனுடன் தொடர்பு கொண்ட அதிகாரிகள், தொழில் ஆரம்பிக்கவுள்ளவர்கள், இதனுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்தவர்கள், ஆய்வுகள் மேற்கொள்பவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பயனுள்ள வகையில் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments