மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளை இரவுவேளையில் சந்தித்த லங்காசிறி குழுமம்

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் 27 ஆவது நாளாகவும் நேற்று தமது போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர்.

தங்களுடைய உரிமையை கோரி போராட்டம் நடாத்தி வரும் பட்டதாரிகளை லங்காசிறி 24 சேவைக் குழுமத்தினர் இரவு வேளையில் பட்டதாரிகளின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொள்வதற்கு நேரடியாக இணைந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆண்டு அடிப்படை பாராது இரவு மற்றும் பகல் பாராது நடாத்தி வரும் போராட்டத்தில் பெரும்பான்மையாக பெண்கள் இருப்பதினால் இரவு வேளையில் அதிகளவான ஆண் பட்டதாரிகளில் வீதியில் படுத்துறங்கும் அவல நிலைமையை அவதானிக்க கூடியதாகயிருந்தது.

இதன்போது லங்காசிறி 24 சேவைக்கு நேரடியாக பட்டதாரிகளை இணைத்து தங்களின் போராட்டம் தொடர்பான கோரிக்கைகளை கேட்டறிந்த போது இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்து இருப்பதாகவும், அதில் ஒரு வகிபாகமாக பட்டம் பெற்று வேலையில்லாப் பட்டதாரியாக சுமார் 1500 இற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் பட்டதாரிகள் தொழில் உரிமை கேட்டு வீதியோரங்களில் 27 நாட்களாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் தமக்கான தொழில் உரிமைப் போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெறுவதுடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போது ஆட்சியிலுள்ள ஆட்சியாளர்கள் வழங்கும் வரை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் தொடர்ச்சியான தொழில் உரிமைக்கான போராட்டத்தில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எங்களின் பிரச்சினையை ஊடகங்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் ஊடக நண்பர்கள் உட்பட இரவுவேளையிலும் மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டை உலகிற்கு வித்தியாசமான முறையில் நேரடியாக இணைத்து பட்டதாரிகளின் கோரிக்கை தொடர்பான நிலைப்பட்டடை கேட்டறிந்து செய்தி வழங்கிய லங்காசிறி 24 சேவைக் குழுமத்தினருக்கும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

Comments