மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியாத நிலை கட்டாயம் உருவாகும் : அந்தோணிப்பிள்ளை மரியராசா

Report Print Arivakam in சமூகம்
advertisement

கடல் வளம் அழிக்கப்படுவதனால் கடலை நம்பி வாழும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் வளம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

மாவட்டத்தின் 73 கிலோ மீற்றர் நீளமான கடற்பகுதியில் சுமார் 1400 தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த நிலையில் தற்போது சுமார் 800ற்கும் அதிகமான வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்களின் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றது.

இவையனைத்தும் தடைசெய்யப்பட்ட தொழில்களையே மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக நாயாறு பகுதி மிக வேகமான சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இதனால் மிக விரைவாக எமது மீனவர்கள் கடலுக்குள் இறங்க முடியாத நிலை நிச்சயமாக உருவாகும்.

அதேபோல் மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக படையினர் கடற்படையினர் ஆகியோரை இணைத்து ஒரு குழு உருவாக்கப்பட்டது.

அந்த குழு தமது அறிக்கையில் மாவட்டத்தில் அதிகரித்த சிங்கள மீனவர்களின் வருகை உள்ளமையினை சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதனால் எதிர்காலத்தில் இன மோதல்கள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அந்த அறிக்கையும் கூட கருத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. இந்நிலையில் சுதந்திரமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வரும் மீனவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அத்தனை கடற்றொழில் முறைகளையும் கையாண்டு தொழிலை செய்கின்றார்கள்.

இதனால் மாவட்டத்தில் உள்ள கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழிலை கடலில் இறங்கிச் செய்ய முடியாதுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

advertisement

Comments