பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

Report Print Kumar in சமூகம்
advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இக்கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா ( பிரதீப் மாஸ்டர் ), முன்னாள் உறுப்பினர்களான ரெங்கசாமி கனகநாயகம் ( கஜன் மாமா ) மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம். கலீல் ஆகியோர் மீதான விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.

advertisement

Comments