விமலின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

Report Print Ramya in சமூகம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமலுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவங்ச ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments