இலங்கையர்களை, லண்டனுக்கு கடத்த முயற்சித்த பெண் கைது

Report Print Ramya in சமூகம்

சட்டவிரோதமாக மனித கடத்தலில் ஈடுபட்ட பிரித்தானிய பெண் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போலி கடவுச் சீட்டுடன் இரண்டு இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த பெண் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் உள்ளிட்ட குழுவினர், ஒவ்வொரு இலங்கையர்களிடமும் இருந்து 17 இலட்சம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இரண்டு இலங்கையர்களை ஜனவரி மாதம் கடத்த முயற்சித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நான்கு இலங்கையர்களை லண்டனுக்கு போலிக்கடவுச் சீட்டுடன் கடத்த முற்பட்ட பிரித்தானியர்கள் அண்மையில் மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments