ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் : மாணவர்கள் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

லிந்துலை பம்பரக்கலை பகுதியில் பெற்றோர் மற்றும் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவேகாலயா பாடசாலை தமிழ் பாடசாலை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரியே பெற்றோர் மற்றும் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) மேற்கொள்ளப்பட்டது.

லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா பாடசாலையின் தரம் 1 முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் பாடசாலை முன்றலில் மூன்று மணிநேரம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

போராடுவோம் போராடுவோம் எங்கள் ஆசிரியர் எங்களது பாடசாலையிலேயே இருக்க அனுமதி கொடுக்கும் வரை போராடுவோம், 7 வருடங்களாக எங்களுக்கு கற்பித்த ஆசிரியரை வெளிப்பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம், தரம் 11 வகுப்பாசிரியரை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்தால் பெற்றோர்களாகிய எங்களது நடவடிக்கை கடுமையானது என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை ஆசிரியரை இடமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும் எனவும் இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments