வவுனியாவில் புதிய நீதிபதிகளுக்கு வரவேற்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நீதிமன்றத்தில் இன்று புதிதாக வவுனியா மாவட்ட நீதிபதியாகவும், வவுனியா மாவட்ட மேலதிக நீதிபதியாகவும் பொறுப்பேற்கவுள் நீதிபதிகளுக்க வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிசார் ஆகியோராலேயே நீதிமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இந்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட நீதிபதியாக இதுவரை கடமையாற்றி வந்த ரி.எல்.ஏ.மனாப் மார்ச் முதலாம் திகதியில் இருந்து மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்தே, வவுனியா மாவட்ட மேலதிக நீதிபதியாக இருந்த எஸ். லெனின்குமார் மாவட்ட நீதிபதியாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இதேவேளை வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதியாக திருமதி எச்.எம்.தஸ்னீம் பௌஸான் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments