28 நாட்களாகியும் முடிவு கிடைக்காத மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமை போராட்டம்

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளால் 28வது நாளாகவும் இன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் தங்களின் குழந்தைகளையும் தூக்கிக் கொண்ட நாளாந்தம் போராட்டத்தில் கலந்து கொள்வதுடன், பாலூட்டும் தாய்மார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 28 நாட்கள் கடந்த தொழிலுரிமை போராட்டத்தில் எந்தவொரு போலியான முடிவுகளுக்காகவும், போராட்டத்தினை கைவிடாமல் அனைவருக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுத்தரும் வகையில் போராட்டம் தொடரும் என்பதே இறுதியும் அறுதியுமான முடிவாகவுள்ளது.

மேலும், வடக்கு கிழக்கு எங்கும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவதற்காக பட்டதாரிகளின் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் பெண்கள் தெருவோரங்களில் நாள்தோறும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக போராடி வருகின்றார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை 28 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் மட்டக்களப்பு பொது நூலக கட்டடத்திற்கு சொந்தமான மலசல கழிப்பறைகளை பயன்படுத்துவதனால் பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments