வவுனியாவில் பொதுக்கிணற்றினை அபகரித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

Report Print Thileepan Thileepan in சமூகம்
0Shares
+
advertisement

வவுனியாவில் பொதுக்கிணறு ஒன்று முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகரசபை எல்லைக்குள் கந்தசாமி கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பகுதியில் பொதுக்கிணறு ஒன்று காணப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குறித்த வீட்டில் குடியிருக்கின்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கிணற்றின் மேற்பகுதியினை சீமேந்தினால் மூடி தமது வீட்டின் சொந்தக்கிணறாக பயன்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதி வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் குடிநீரினை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதுடன், அருகில் உள்ள கந்தசுவாமி ஆலயத்திலேயே குடிநீரினை பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரனிடம் தொடர்பு கொண்ட போது,

குறித்த கிணறு தொடர்பாக எமக்கும் பொதுமக்களால் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதையடுத்த கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டேன்.

இதேவேளை இன்று நகரசபையினால் குறித்த காணியின் வரைபடம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வீட்டு உரிமையாளருக்கு கடிதம் அனுப்பட்டதுடன், இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.

advertisement

Comments