உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்ய பிடியாணை

Report Print Steephen Steephen in சமூகம்

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு 5 ஹெலன் மெதினியாராம விகாரைக்குள் பொதுமக்களுக்கு தடைகள் ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியமைக்கு எதிராக பிரதேசவாசிகள் தாக்கல் செய்துள்ள வழக்கு சம்பந்தமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நீதிமன்றம் தம்மாலோக்க தேரருக்கு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments