சிறையில் இருந்து தினமும் மனைவியுடன் தொலைபேசியில் உரையாடிய சமயங்

Report Print Steephen Steephen in சமூகம்

கொலை வழக்கொன்றுக்கு அமைய மூன்று வருடங்களாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவரை பார்க்க தான் ஒரு நாள்கூட சிறைச்சாலைக்கு சென்றதில்லை என பாதாள உலக குழு தலைவரான சமயங் என்ற உதுகொட பத்திரகே அருண உதயங்க என்பவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

எனினும் தனது கணவர் சிறையில் இருந்தவாறு தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடன் பேசி வந்ததாகவும் சமயங் என்பவரின் மனைவியான டல்சி பத்திரகே சுனந்தி கல்தேரா கூறியுள்ளார்.

களுத்துறை எத்தனமடல பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கி பிரயோகத்தில் சமயங் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில் சாட்சியமளித்த போதே சுனந்தி கல்தேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி தாக்குதலில் சமயங் அவரது 4 சாகாக்கள் மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

களுத்துறை பிரதான நீதவான் பாரதி விஜேரத்ன முன்னிலையில் தொடர்ந்தும் சாட்சியமளித்த சுனந்தி கல்தேரா, கொல்லப்பட்ட அருண உதயங்க எனது சட்டரீதியான கணவர். எனககு ஒரு குழந்தை உள்ளது.

கொலை குற்றச்சாட்டில் எனது கணவரை மிரிஹான பொலிஸார் கைது செய்தனர். மூன்று வருடங்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்து வந்த எனது கணவரை நான் ஒரு நாள் கூட நேரில் சென்று சந்தித்ததில்லை.

எனினும் தினமும் அவரை சிறைச்சாலையில் இருந்து என்னுடன் தொலைபேசியில் உரையாடுவார். கொல்லப்படுவதற்கு முதல் நாளும் என்னுடன் பேசினார். அவரும் கடும் வெறுப்படைந்த நிலையில் என்னுடன் பேசினார்.

தான் பல தவறுகளை செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த நிலையில், எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் அறிய கிடைத்தது.

நான் வைத்தியசாலைக்கு வந்து கணவரின் சடலத்தை பொறுப்பேற்றுக்கொண்டேன். என் கணவர் மீது யார் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் என்பது எனக்கு தெரியாது என சுனந்தி கல்தேரா குறிப்பிட்டுள்ளார்.

Comments