லசந்த எவ்வாறு கொலை செய்யப்பட்டார்..? புலனாய்வு பிரிவின் புதிய தகவல்

Report Print Ramya in சமூகம்
advertisement

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லசந்த விக்ரமதுங்க, தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய, பிரேத பரிசோதனை அறிக்கைகளை வைத்துக் கொண்டே குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் அவரின் கீழ் இயங்கிய விசேட பிரிவிற்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர்.

advertisement

Comments