18 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

18 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை வனாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வனாத்தவில்லு - புத்தளம் வீதியில் 6ஆவது மைல்கல் பகுதியில், வான் ஒன்றில் இன்று கேரள கஞ்சா கடத்திய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரளா கஞ்சா இந்தியாவிலிருந்து படகு மூலம் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments