தேசிய தலைவரை சிறையில் அடைத்து விட்டனர்: புலம்பும் வீரவங்சவின் சகா

Report Print Steephen Steephen in சமூகம்
advertisement

நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வரும் இந்த முக்கியமான தருணத்தில் அதற்கு எதிராக முழு நாட்டை அணித்திரட்ட கூடிய தேசிய தலைவர் கடந்த 70 தினங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச இன்று மீண்டும் 14 நாட்களுக்கு விளக்கமறிலில் வைக்கப்பட்ட பின்னர், கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு எதிரில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், விமல் வீரவங்ச என்ற தேசிய தலைவர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 70 நாட்கள் கடந்துள்ளன.

நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவிற்கு அமைய அவர் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை மேலும் 14 நாட்கள் சிறை சோறு சாப்பிட நேர்ந்துள்ளது.

ஒற்றையாட்சி என்ற அரசியலமைப்பை மாற்றி சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், அதற்கு எதிராக முழு நாட்டை அணித்திரட்ட கூடிய தேசிய தலைவரை பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, தேசிய வளங்கள் விற்பனை செய்யும் போது அதற்கு எதிராக முழு நாட்டை அணித்திரட்ட கூடிய தலைவரே இவ்விதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஊடகங்கள் அடக்கப்பட்டுள்ளன. உண்மையான எதிர்க்கட்சியான கூட்டு எதிர்க்கட்சியை அடக்கி செல்லும் இந்த பயணத்திற்கு ஆயுள் குறைவு.

இன்னும் சில பௌர்ணமி தினங்களில் இந்த சர்வாதிகார பயணத்திற்கு பதில் கிடைக்கும் எனவும் உதயசாந்த குணசேர குறிப்பிட்டுள்ளார்.

advertisement

Comments