பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீட்டை ஏலத்தில் விற்க தற்காலிக தடை

Report Print Steephen Steephen in சமூகம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையில் உள்ள காணி மற்றும் வீட்டை ஏலத்தில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு பூகொடை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார்.

மல்வானையில் களனி கங்கைக்கு அருகில் அமைந்துள்ள 16 ஏக்கர் பரப்பளவை கொண்ட காணி மற்றும் அதில் உள்ள வீட்டையே ஏலத்தில் விற்பனை செய்ய நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த காணியும் வீடும் பசில் ராஜபக்ச உட்பட மூன்று பேருக்கு சொந்தமானதல்ல என தெரிவிக்கப்பட்டால், அவற்றை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் காணியை அரசு கையகப்படுத்தி பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தும் வகையில் அமைச்சரவை நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டமா அதிபர் பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு அறிவித்துள்ளதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments