கவனக் குறைவுடன் வாகனம் செலுத்தியவருக்கு 37 வருட சிறை

Report Print Ramya in சமூகம்

கவனக் குறைவுடன் பஸ் செலுத்திய சாரதிக்கு 37 1/2 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதி குறித்த சாரதி கவனக் குறைவுடன் பஸ் செலுத்தியமையால் 14 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தினை தொடர்ந்து குறித்த சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

10 வருடக்காலங்களுக்கு பிறகு இன்றைய தினம் இந்த வழக்கு குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே, குறித்த சாரதிக்கு 37 1/2 வருட சிறைத் தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

மரணம் விளைவிக்கும் வகையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகநபருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், குற்றவாளிக்கு எதிராக 76 பேர் சாட்சியம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments