இராணுவத்தினரிடமிருந்து காணிகளை விடுவிக்க கேப்பாப்புலவு மக்களின் புதிய திட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

கேப்பாப்புலவில் இராணுவத்திடம் இருக்கும் தமது நிலங்களை மீட்பதற்காக பொது மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 20 ஆவது நாளை எட்டியுள்ளது.

கேப்பாப்புலவை சேர்ந்த மக்களால், 135 குடும்பங்களுக்குச் சொந்தமான 480 காணிகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமது போராட்டம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் இதுவரை கவனம் செலுத்தவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் தொடர்ந்து தமது போராட்டத்தினை மேலும் வழுப்பெறச் செய்வது தொடர்பாக தாம் கலந்து ஆலோசித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது தமது சொந்தக் காணிகளை இராணுவத்தினர் விரைவில் விடுவிப்பதற்காக அரசிற்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று போராட்டத்தில ஈடுபடும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தொடர்ந்து தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments