தப்பியோடிய 41 ஆயிரம் படையினரில் 1994 பேர் மட்டுமே கைது : இராணுவப் பேச்சாளர்

Report Print Steephen Steephen in சமூகம்

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 41 ஆயிரம் பேரில் ஆயிரத்து 994 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 570 பேர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள்.

மேலும் சரணடையாமல் இருக்கும் படையினரில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

மூன்று இராணுவ அதிகாரிகள் உட்பட 1570 இராணுவத்தினரும், 393 கடற்படையினரும், 31 விமானப்படையினரும் தேடுதல்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Comments