திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் 150 ஆவது வருட ஆண்டுவிழா

Report Print Victor in சமூகம்

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் 150ஆவது வருட ஆண்டு விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுகள் நேற்று(19) மாலை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சி தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமான இரா.சம்பந்தன், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, பாராளுமன்றா உறுப்பினர் இம்றான் மகரூப், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், முன்னாள் ஆயர் ஜோசப் கிங்ஸ்லீ சுவாமிபிள்ளை உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதன்போது கல்லூரியின் 150வது விழாவை ஒட்டிய முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments