அமெரிக்காவை பின்தள்ளிய சுவிஸ்! இந்தியாவை பின்தள்ளிய இலங்கை.... எதில் தெரியுமா?

Report Print Ramya in சமூகம்
advertisement

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

இந்த நிலையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122ஆவது இடத்தையும் அமெரிக்கா 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

அந்த வகையில், கடந்த வருடம் நான்காவது இடத்தை பிடித்திருந்த நோர்வே இந்த வருடம் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

முதலாவது இடத்தில் இருந்த டென்மார்க் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தை நோர்வே பிடித்துக் கொண்டது.

முறையே, ஐஸ்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சுவீடன் ஆகியன 3-10ஆம் இடங்களை பிடித்துக் கொண்டுள்ளன.

advertisement

Comments