அப்பாவி மக்களின் அவல நிலையை நேரில் பார்த்து பாதிக்கப்பட்டேன்! நீதன் சன்

Report Print Mohan Mohan in சமூகம்
advertisement

அப்பாவி தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் கேள்விப்பட்டதை விட, நேரில் வந்து பார்த்ததன் மூலம் அதன் பாதிப்பு பலமாக இருந்தது என்று ஈழத்தமிழரான நீதன் சன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஸ்கோபரோ- ரூஜ் ரிவர் மாநகர சபையின் 42ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நடந்த இடைத்தேர்தலில், 4763 வாக்குகளைப் பெற்று ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிலையில் கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் ஜோன் ரொர்ரி (John Tory) நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தார்.

அவருடன் இணைந்து சென்ற கனடா வாழ் மக்கள் பிரதிநிதி நீதன் சன், முல்லைத்தீவு - முள்ளியவளையில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இங்குள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ்மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆனால் அவற்றை எவ்வாறு, எந்த வகையில் செய்தால் பயனுள்ளதாக அமையும் என்பது தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றதே தவிர, உதவி செய்வதற்கு அவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

அவ்வாறான உதவிகளை தகுந்த முறையில் செய்வதற்கே நாம் முயற்சித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

கனடா ரொறன்ரோ மாநிலத்தினையும், யாழ்ப்பாணம் மாவட்டத்தினையும் இணைப்பதற்கான உத்தியோகப்பூர்வ உடன்படிக்கை யாழ்.பொது நூலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments