ஐக்கிய நாடுகள் சபை கூட வடகிழக்கு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது

Report Print Sumi in சமூகம்
advertisement

நலன்புரி முகாமில் உள்ள வலி.வடக்கு மக்கள் நோயினால் தினமும் இறக்கின்றார்கள். அவர்கள் பற்றி சிந்திப்பதற்கு யாரும் இல்லை. மாகாண சபையும் கண்டுகொள்ளவில்லை என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்தியாவில் சுடப்பட்ட மீனவரின் இறப்புக்கு எமது அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையினை நம்பிய எமது மக்கள். ஐக்கிய நாடுகள் சபை கூட வடகிழக்கு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது.

மக்களின் போராட்டமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணும். அதற்கு சிறந்த உதாரணம் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்.

நலன்புரி முகாம்களில் வாழும் உப குடும்பங்களை மீள்குடியேற்றிவிட்ட தாம் மீள்குடியேற்றம் செய்து வருகின்றோம் என அரசு தெரிவிக்கின்றது.

மக்களின் பூர்வீக நிலங்கள் இராணுவத்தின் பிடிக்குள் இருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் நில ஆக்கிரமிப்பு விடயங்களை சாதாரணமாக ஜனாதிபதி கருதுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாசகரமான ஆட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. நலன்புரி முகாம்களில் உள்ளவர்களை பற்றிய யார் சிந்திக்கின்றார்கள். மாகாண சபை சிந்திக்கின்றதா? மத்திய அரசாங்கம் சிந்திக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.

நலன்புரி முகாமில் உள்ளவர்களின் குடிசைகளின் கூரைகள் அழிவடைந்த நிலையில் காணப்படுவதனால் அவற்றினை திருத்திக்கொடுப்பதற்கு உதவி செய்யுமாறு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தும் இதுவரையில் அந்த உதவிகள் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்கள்.

நலன்புரி முகாம்களில் இருப்பவர்கள் நோயினால் இறந்து போகின்றார்கள். வாழ வேண்டிய மக்கள் நோயினால் இறந்து போகின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் கோவில்களை கட்டுவதற்கு நிதியினை வழங்குகின்றார்கள். நலன்புரி முகாமில் உயிரிழந்த தாயாருக்கு மருத்துவ தேவைக்காக 1 லட்சம் ரூபா தேவைப்பட்டது. அதைக் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

அதன் காரணமாக அந்த தாயார் இறந்துவிட்டார். அந்த பிள்ளைகள் யாருமில்லாத நிலையில் இருக்கின்றார்கள். இதைப்பற்றி எந்த அரசியல்வாதிகள் யோசிக்கின்றார்கள்.

2017 ஆம் ஆண்டினை இணைப்பாதுகாப்பு அல்லது மீன்பிடி பாதுகாப்பு வருடமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். ஆனால், வடமாகாண சபையிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் அந்த தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மிகவிரைவில் மாகாண சபையின் ஊடாக மத்திய அரசாங்கத்தினையும் இணைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். இதனை மத்திய அரசாங்கம் புரிந்து செயற்பட வேண்டும்.

தென்னிலங்கை ஊடகங்கள் சில இனவாதத்தினை தூண்டி, மகிந்தவினை மீண்டும் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

மகிந்த ஆட்சிக்கு வந்தால், மீண்டும் மிகப்பெரிய அழிவினை சந்திக்க நேரிடும். இந்த அரசினை பாதுகாக்க யாரும் முயற்சிக்க கூடாது என மேலும் தெரிவித்தார்.

advertisement

Comments